×

சாலையில் திரிந்த மாடுகள் கோ சாலையில் அடைப்பு

நாகை, நவ.14: நாகை நகர பகுதியில் சுற்றிதிரிந்த மாடுகளை தினகரன் செய்தி எதிரொலியால் நகராட்சி பணியாளர்கள் பிடித்து கோ சாலையில் அடைத்தனர். நாகை நகர பகுதியில் சாலைகளில் எங்கு பார்த்தாலும் மாடுகள், குதிரைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் சாலைகளின் நடுவே கால்நடைகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும்பாலான நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை காடம்பாடி அருகே சாலையின் நடுவில் நின்ற கால்நடையால் அவ்வழியாக சென்ற ஆட்டோ எதிர்பாராமல் கவிழ்ந்ததில் பள்ளி மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை நகராட்சி பணியாளர்கள் பிடிக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் படம் மற்றும் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து கலெக்டர் பிரவீன் பி நாயர் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் ஏகராஜ் மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் செல்லதுரை, துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகேசன், கந்தசாமி, பாஸ்கர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் 5 நேற்று நாகை நகர பகுதியில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்து நகராட்சிக்கு சொந்தமான கோ சாலையில் அடைத்தனர்.

Tags : Roads ,road ,
× RELATED மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில்...