×

கோனோவீடர் பயன்படுத்துவதால் நெற்பயிரில் கூடுதல் மகசூல் கிடைக்கும்

மன்னார்குடி, நவ. 14:கோனோவீடர் பயன்படுத்துவதால் நெற்பயிரில் அதிக தூர் உண்டாகி மகசூலும் கூடுதலாக கிடைக்கும் என பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நீர் வள நிலவளத்திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடியில் கோனோவீடர் வாயிலாக களை மேலாண்மை செயல் விளக்க பயிற்சி வடுவூர் மேல்பாதி கிராமத்தில் நடைபெற்றது. நீடா வேளாண்மை அறிவியல் நிலையம் வாயிலாக தமிழ்நாடு நீர் வள நிலவளத்திட்டத்தில் “திருந்திய நெல் சாகுபடியில் கோனோவீடர் களைக் கருவியின் வாயிலாக களையை கட்டுப் படுத்துவதற்கான செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடுவூர் மேல்பாதி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், களைகளானது நெல் சாகுபடியில் மகசூல் இழப்பிற்கு மறைமுகமாக காரணமாக அமைகின்றன எனத் தெரிவித்து ஆரம்ப நிலையிலேயே களைகளை கட்டுப் படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறுகையில், விவசாயிகள் பெரும்பாலும் ரசாயன களைக்கொல்லி மருந்துகளை முறையாக பயன்படுத்தாத காரணத்தினால் மண் வளம் பாதிப்படைகிறது எனத் தெரி வித்தார். எனவே களைக்கருவியான கோனோவீடர் மூலம் களை நிர்வாகம் மேற்கொள்ளும் போது களைகளானது அப்புறப் படுத்தப்படாமல் மண்ணில் அமுக்கி விடுவதால் பயிருக்கு வேண்டிய தழைச்சத்து உரமாக மாற்றப்படுகிறது. அதனால் ரசாயன உரமான யூரியாவின் அளவை குறைத்துப் பயன் படுத்தினாலே போதுமானது. மேலும் களைகள் அமுக்கி விடும்போது நெற் பயிரின் வேர்பகுதியில் நல்ல காற்றோட்டம் உண்டாகி பயிரின் வளர்ச்சி நன்கு அமைவதோடு தூர்கள் அதிகமாக உருவாகும்.அதன்பொருட்டு மகசூலும் அதிகரிக்கும், மண் வளமும் காக்கப்படும் என கூறினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோனோவீடர் கருவி வாயிலாக களை நிர் வாக முறை குறித்து செயல் விளக்கங்கள் விவசாயிகளின் வயலில் செய்து காண்பிக்கப் பட்டது. மேலும் நிலவள நீர் வளத்திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு உயிர் உரங்கள் மற்றும் சூடோமோனாஸ் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் உதவிப் பேராசிரியர் சரவணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண் டனர். இந்த செயல் விளக்கத் திற்கான ஏற்பாட்டை இளநிலை ஆராய்ச்சியா ளர் சுரேஷ் மற்றும் திட்ட உதவியாளர் கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED நாகர்கோவில் காவல்கிணறு 4 வழிச்சாலை பயன்பாட்டிற்கு வராத அவலம்