×

வலங்கைமானில் மகளிர் குழு கூட்டமைப்புக்கு சமுதாய முதலீட்டு நிதி

வலங்கைமான், நவ.14: வலங்கைமானில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மகளிர் குழு கூட்டமைப்புக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கினார். வலங்கைமானில் உள்ள தனியார் திருமண மன்டபத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ஊராட்சி அளவிலான மகளிர்குழு கூட்டமைப்புக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் லேகா அனைவரையும் வரவேற்றார். டிஆர்ஓ பொன்னம்மாள், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, ஆர்.டி.ஓ ஜெயபிரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு வலங்கைமான் ஊராட்சி அளவிலான குழுகூட்டமைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 52 லட்சம் சமுதாய நிதியினை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் இஞ்ஞாசிராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் குணசேகரன், சங்கர், பால்வள கூட்டுறவு சங்க தலைவர் இளவரசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Community Investment Fund for Women's Group Consortium ,Valangaiman ,
× RELATED வலங்கைமான் அடுத்த ஆலங்குடி கோயிலில்...