×

இரு கட்சியினர் மோதல் வழக்கில் சீமான் உள்பட 14 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

திருச்சி,நவ.14: விமான நிலையத்தில் இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட ேமாதல் வழக்கு தொடர்பாக சீமான் உள்பட 14 பேர் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்தாண்டு மே 19ம் தேதி மதிமுக பொது செயலாளர் வைகோ விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை வரவேற்க மதிமுகவினர் திரண்டு இருந்தனர். அதே விமானத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்தார். விமானம் திருச்சியில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் காத்திருந்த மதிமுக, நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் திடீரென ஒருவரையொருவர் கட்டையாலும், கொடி கம்பத்தினாலும் தாக்கி கொண்டனர்.இந்த சம்பவம் குறித்து மதிமுக சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில், சீமான், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பிரபு, கரிகாலன், அலெக்சாண்டர், இனியன்பிரபு, துரைமுருகன், பர்மா குமார் நாகேந்திரன், மணிகண்டன், ஞானசேகரன், சுகேல், சதீஷ்குமார், மதியழகன், கந்தசாமி உள்ளிட்ட 14 பேர் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 4ம் தேதி ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷகிலா முன் சீமான் உள்பட 14 பேரும் ஆஜராகினர். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.அதை தொடர்ந்து ேநற்று நடந்த விசாரணைக்கு சீமான் உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் ஷகிலா, இந்த வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags : court ,Trichy ,Seaman ,clash ,
× RELATED திருச்சி கிராமத்தில் செயல்படும்...