திருச்சி, ரங்கம், மணப்பாறையில் நடந்த விழாக்களில் 3,317 பயனாளிகளுக்கு ரூ.3.96 கோடி நலஉதவி: அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி, நவ.13: திருச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தமிழக முதல்வர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட 3,317 பயனாளிகளுக்கு ரூ.3,96,67,959 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி, ரங்கம், மணப்பாறை ஆகிய இடங்களில் நேற்று நடந்தது.கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:திருச்சி மாவட்டத்தில் (21.8.2019) முதல் (13.9.2019) வரை 503 முகாம்கள் நடத்தப்பட்டு 17 ஆயிரத்து 713 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்குழந்தை திட்டத்தின் கீழ் 2018 - 2019 ஆண்டில் 716 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதம், 1 கோடியே 79 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டது. நமது மாவட்டத்தில் 25 திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2019 - 2020ம் கல்வி ஆண்டில் 221 மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகையின் திட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ள 2019- 2020 கல்வி ஆண்டில் 20,016 (12ம் வகுப்பு மாணவர்களுக்கும்) 19,279 (11ம் வகுப்பு மாணவர்களுக்கு) மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 484 மாணவர்களுக்கும், 1 இலட்சத்து 12,860 தொடக்க கல்வி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல், விலையில்லா குறிப்பேடு, வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 16,015 பயனாளிகளுக்கு 9 கோடியே 40 லட்சத்து 16,000 மதிப்பில் 16 வகையான பரிசுப்பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 780 பேருக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இன்று (நேற்று) மட்டும் 3,317 பயனாளிகளுக்கு ரூ.3,96,67,959 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது’ என்றார்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, எம்எல்ஏ சந்திரசேகர், டிஆர்ஓ சாந்தி, ரங்கம் உதவி கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், திருச்சி ஆர்டிஓ அன்பழகன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மணப்பாறை நகராட்சி ஆணையர் தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: