×

சவுக்கு மரங்களை எரித்து கரியாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

புவனகிரி, நவ. 14:  பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் அதிக அளவில் சவுக்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள சின்னாண்டிக்குழி, பெரியாண்டிக்குழி, சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு, கரிக்குப்பம், கொத்தட்டை உள்ளிட்ட கிராமங்களில் சவுக்கு அதிகம் விளைந்துள்ளது. தற்போது இந்த சவுக்கு மரங்களை வெட்டி விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதற்கிடையே விவசாய தொழிலாளர்கள் சவுக்கு மரக் கட்டைகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சவுக்கு மரங்கள் வெட்டப்பட்ட பிறகு அதில் கிடைக்கும் சிறிய கட்டைகள், வேர்கள் போன்றவற்றை எடுத்து அதை பக்குவமாக எரியூட்டும் விவசாய தொழிலாளர்கள், பின்னர் அவற்றை பக்குவப்படுத்தி அடுப்புக்கரியாக மாற்றுகின்றனர்.இவ்வாறு உருவாக்கப்படும் அடுப்பு கரி மொத்த விலையில் கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. புதுச்சேரி, மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற இடங்களிலிருந்து இங்கு வரும் மொத்த வியாபாரிகள் அடுப்பு கரியை மொத்த விலையில் கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் இந்த வட்டாரத்தில் உள்ள விவசாய தொழிலாளர்கள் அடுப்புக் கரியை உற்பத்தி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED தேர்தல் பணிகளை திமுகவினர் உடனே தொடங்க வேண்டும்