×

விழிப்புணர்வு பயிற்சி முகாம்

விக்கிரவாண்டி, நவ. 14: விக்கிரவாண்டி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் வட்டார
வள மையத்தில் நடந்தது. மேற்பார்வையாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் ஜெயக்குமார் முகாமை  தொடங்கி வைத்தார்.
முகாமில் 21 வகையான மாற்றுத்திறன் பற்றியும், சிறப்பு குழந்தைகளுக்கு அரசு வகுத்துள்ள சட்ட, திட்டங்கள் குறித்தும் காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
மேலும் சிறப்பு
குழந்தைகளை கையாளும் முறைகளை பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டது. பள்ளி ஆயத்த பயிற்சி மையம், வீட்டு வழி கற்றல், பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பயிற்றுனர்கள் சின்னராஜ், மேரி கரோலின் ராணி, தொழிற்சார் மருத்துவர் மாணிக்க ராஜா ஆகியோர் பெற்றோர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை