அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி, நவ. 14:    தியாகதுருகம் ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி அக்கட்சி அலுவலகத்தில் நடந்தது. தியாகதுருகம் ஒன்றிய அதிமுக செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கி 33 கிராமங்களுக்கான 8500 அதிமுக உறுப்பினர் அட்டைகளை நிர்வாகிகளிடம் வழங்கினார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் குமரவேல், குமாரசாமி, ராஜேந்திரன், தமிழரசிகுமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலகிருஷ்ணன், நீலாவதிகதிர்வேல், குமார், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஊராட்சி செயலர் சுப்புமகாலிங்கம், தங்கராசு, முன்னாள் இயக்குநர் மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி, நிர்வாகிகள் பாசறை சிவா, மதியழகன், செல்வராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.   

Related Stories:

>