தலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு

புதுச்சேரி, நவ. 14:   புதுவையில் குடியரசு, சுதந்திரம், விடுதலைநாள் விழாக்களின்போது தலைவர்களின் சிலையை அலங்கரிக்க அரசு ரூ.97லட்சம் ெசலவு செய்வதாகவும், இதனை குறைக்க வேண்டும் எனவும் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்த அதன் தலைவர் ரகுபதி முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  புதுச்சேரியில் குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, விடுதலைநாள் ஆகிய விழாக்களின்போது நகரில் உள்ள 29 சிலைகளை மின் விளக்குகளால் அலங்கரிக்க ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 360, புதுச்சேரி நுழைவு வாயில்களை அலங்கரிக்க ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 336, கவர்னர் மாளிகையை அலங்கரிக்க ரூ.6 லட்சம், சட்டசபையை அலங்கரிக்க ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், தலைமை செயலகத்தை அலங்கரிக்க ரூ.6 லட்சம், எல்.இடி திரைகளில் ஒளிபரப்பு செய்ய ரூ.2 லட்சத்து 26 என மொத்தம் ரூ.29 லட்சத்து 50 ஆயிரத்து 356 செலவு செய்துள்ளனர். மூன்று விழாக்களுக்கும் சேர்த்து 88 லட்சத்து 51 ஆயிரத்து 68 ரூபாய் செலவு செய்து வருகின்றனர்.   இந்தவிவரம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது போன்ற விழாக்களுக்கு தேசத்தலைவர்களின் சிலைக்கு மட்டுமில்லாது,  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலைக்கும் பல லட்சம் செலவு செய்து. மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இது போல நகரில் அமைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகளின் பிறந்தநாள், நினைவுநாள் விழாக்களுக்கு  சிலைகளுக்கு மாலை அணிவித்து மின் விளக்கு அலங்காரம் செய்ய ஆண்டுக்கு ரூ.8 லட்சத்து 76 ஆயிரத்து 515 செலவு செய்யப்படுகிறது. இத்துடன், ஏற்கனவே 3 விழாக்களுக்கும் சிலைகளை அலங்கரிக்க மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்க ஆகும் செலவையும் சேர்த்தால், மொத்தம் ரூ.97 லட்சத்து 27 ஆயிரத்து 583 செலவிடப்படுகிறது. மாநிலத்திலுள்ள சிகப்பு ேரசன்அட்டைதாரர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பட்சத்தில் புதுச்சேரியில் 52 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாக தெரிகிறது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காததோடு, தற்போது கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு  ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்காமல் அன்றாட உணவுக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.

இது போன்ற நிலையில் ஆடம்பர, அலங்காரங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வது ஏற்புடையது அல்ல. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறதே தவிர பொதுமக்களுக்கு எவ்வித பயனும் கிடையாது. எனவே இனிவரும் காலங்களில் அரசின் நிதி நிலையை கருத்தில்கொண்டு, இது போன்ற ஆடம்பர செலவுகளுக்கான நிதியை குறைத்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: