வீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்

திருப்பத்தூர், நவ.14: திருப்பத்தூர் வடஅக்ரகாரம் பகுதியில் வீட்டில் புகுந்த 10 அடி பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.திருப்பத்தூர் வடஅக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் விஜயா(30) இவர் வீட்டில் நேற்று காலை  10 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று வீட்டினுள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியேறி அலறி கூச்சலிட்டார்.இதையடுத்து, அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு அதிகாரிகள் ஒரு மணி நேரம் தேடி 10 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை அருகே இருந்த ஏலகிரி மலை காட்டில் விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: