வங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை

ஆம்பூர், நவ.14: வங்கியில் பணம் செலுத்த சென்ற பெண்ணிடம் இருந்து ₹50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜயா(50). இவர் சேர்மன் ராஜகோபால் தெருவில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். தனது கணக்கில் ₹50 ஆயிரம் செலுத்த பையில் வைத்துக்கொண்டு நேற்று காலை வங்கிக்கு வந்தார்.அங்கு பணம் செலுத்தும் கவுன்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்தார். கவுன்டர் அருகே சென்று பார்த்தபோது பையில் இருந்த பணம் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வரிசையில் நின்றிருந்தபோது யாரோ மர்ம நபர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் விஜயா வைத்திருந்த பையில் திருடி செல்வது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து பணம் திருடி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories:

>