வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்

வேலூர், நவ.14: தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாதுகாப்பற்று மற்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள் பள்ளிகளின் தரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 23 பள்ளி வளாகங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ள 115 வகுப்பறைகளை இடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இடிக்கப்பட வேண்டிய 23 பள்ளிகளின் பெயர் விவரங்கள்:
Advertising
Advertising

 வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள், மின்னல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 வகுப்பறைகள், பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 3 வகுப்பறைகள், இடையன்சாத்து மேல்நிலைப்பள்ளியில் 5 வகுப்பறைகள், அரக்கோணம அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 வகுப்பறைகள், கஸ்பா நகரவை மேல்நிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள்,

காவேரிப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7 வகுப்பறைகள், பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 வகுப்பறைகள், அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள், வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள், நாகவேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள், நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 17 வகுப்பறைகள், நெமிலி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், ஆம்பூர் அ.கஸ்பா அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள், காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், சின்னமூக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள், பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள், ஒழுகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 வகுப்பறைகள், குரும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள் என மொத்தம் 125 வகுப்பறைகள் இடிக்கப்படுகின்றன. இதில் ஒரு சில பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: