தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு

ஆம்பூர், நவ.14: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க ஆம்பூர் நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை தலைமை ஆசிரியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பாக கடந்த 1993ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு நாள் மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 126 பள்ளி மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.

இதில் ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் ரம்யா, சண்முகபிரியா ஆகியோரின் பல்வேறு வகை மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களை மதிப்பீடு செய்தல் என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் சத்தியகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories:

>