₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்

வேலூர், நவ.14: வேலூர் சத்துவாச்சாரியில் ₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் மாநராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படுகிறது.முதற்கட்டமாக வேலூர் கஸ்பாவில் இருந்து பாலாற்றில் மழைநீர் சென்று சேரும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக சத்துவாச்சாரி 2வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த மழைநீர் வடிகால்வாய் சத்துவாச்சாரி, வள்ளலார் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.    

Related Stories:

>