×

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

சிவகாசி, நவ. 14: அமமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் முத்துராஜா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரியா, அமமுக தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட பொருளாளர் வீராச்சாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு அமமுக விருதுநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் சிந்துமுருகன், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் வெங்கடேஷ்,

சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழகச் செயலாளர் சிட்டிபாபு மற்றும் வத்திராயிருப்பு அமமுக ஒன்றிய இணைச்செயலாளர் கூமாபட்டி கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான அமமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். இந்நிலையில், அமமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முத்துராஜா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரியா, அமமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் வீராச்சாமி மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என அமைச்சரிடம் அவர்கள் உறுதியளித்தனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு