×

திருவில்லிபுத்தூரில் மழையால் மறுகால் பாயும் வாழைக்குளம் கண்மாய்

திருவில்லிபுத்தூர், நவ. 14: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வாழைக்குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால், பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ‘மகா’ புயல் உட்பட பல்வேறு காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால் பரவலாக மழை பெய்து வருகின்றன. இதனால், பெரும்பாலான கண்மாய், குளங்கள் நிரம்பி வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்திலும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கிறது. இக்கண்மாய் நிறைந்தால் மறுகால் பாய்ந்து, திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து இருந்தால், ஒரு சில நாட்களில் பெரியகுளம் கண்மாய் நிறையும் வாய்ப்பு உள்ளது.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு