×

ஆரோக்கியமாக வாழ மனதை மகிழ்ச்சியாக வைத்துகொள்ளுங்கள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நாம் இரவு தூங்கி காலையில் எந்திரிக்கும்போது, உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். ரத்த ஓட்டம் உடல் முழுமையாக நூறு சதவீதம் ஓட வேண்டுமானால் அதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியம். ஆக்ஸிஜன் நமது உடலில் எடுத்தால் மட்டுமே ரத்த ஓட்டம் நன்றாக சீராக இருக்கும். அதற்கு ஒரே வழி உடற்பயிற்சி செய்வதே ஆகும். தினமும் ஒரு மணி நேரம் உங்கள் உட்ல ஆரோக்கியத்திற்காக செலவிடுங்கள்.மனம் செம்மையானால் மந்திரம் சொல்ல தேவை இல்லை. மனம் என்பது தனியாக உடலில் எங்கும் தேட முடியாது. உடல் உறுப்பாக இல்லாத ஒரு மாயையே மனமாகும். ஆனால், இந்த மாயை மனம் தான் நம்மை இப்படி ஆட்டி படைக்கிறது.

நாம் பிறந்தது முதல் இது வரை சேர்த்து வைத்த பதிவுகளின் என்ன கூட்டமே மனம் ஆகும். நமது மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒவ்வொரு வேதியியல் மாற்றம் உடலில் நிகழ்கிறது. சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகள் வேலை செய்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நல்ல ஜெல் சுரந்து உடல் நலமாக இருக்கும். கவலையாக இருந்தால் அமிலம் சுரந்து உடல் கெட்டுப் போகும். மேலும், நாம் கிரீன் டீ பருகுவது உடலுக்கு நல்லது. இதனால், நமது உடலில் செல்கள் சேதமாவது தடுக்கப்படுகிறது. கிரீன் டீ பருகுவதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்