தொப்பம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற நாளை சிறப்பு முகாம்

திண்டுக்கல், நவ.14: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை  ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை  வழங்கப்பட்டு வருகிறது.  தொலை தூரங்களில் இருந்து வந்து அடையாள அட்டை பெறாதவர்களுக்காக ஒன்றிய வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 15ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு  மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 8 புகைப்படத்துடன்  இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன்  வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் மாதாந்திர உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் முகாமில் வந்துகொண்டு மனுக்களை அளிக்கலாம். இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Related Stories: