ஏராளமானோரிடம் பல கோடி அபேஸ் மோசடி மன்னனை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

சேலம், நவ.14:சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்எம்வி குரூப்ஸ் கம்பெனியை நடத்தி வந்தவர் மணிவண்ணன். தனது நிறுவனத்தில் பண முதலீடு  செய்தால், 100 நாட்களில் இரட்டிப்பாக்கி தருவதாகவும் மற்றும் ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றுக்கு பகுதி வாரியாக விநியோக உரிமை தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய ஏராளமானோர் பல கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்தனர். ஆனால், அவர் கூறியபடி யாருக்கும் பணத்தை கொடுக்கவில்லை. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிவண்ணன், அவரது மனைவி இந்துமதி ஆகியோரை கைது செய்தனர்.

 இவரை காவலில் எடுத்து விசாரத்தனர். அப்போது அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இவர் ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், மோகனூரைச் சேர்ந்த ஒருவரிடம் ₹1 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, சேலம் குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க டவுன் போலீசார் சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், மணிவண்ணனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் கோர்ட்டில் கூறுகையில், ‘ஈரோட்டில் நான் ஒருவரிடம்  பணம் கொடுத்து வைத்திருந்ேதன். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அவற்றை கோரட்டில் ஆஜர்படுத்தவில்லை,’ என்றார்.

Related Stories:

>