×

போடி பகுதிகளில் பருத்தி சாகுபடி தீவிரம்

போடி, நவ. 14: போடி பகுதிகளில் பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போடி புறநகர் பகுதிகளான அம்மாபட்டி, சுந்தரராஜ்புரம், மீனாட்சிபுரம், கீழசொக்கநாதபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, நாகலாபுரம், ராசிங்காபுரம், சிலமலை, சில்லமரத்துப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆறு மற்றும் மழையால் ஏற்படும் நிலத்தடிநீர் பாசனத்தால் விவசாயிகள் பருத்தி விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் பருத்தி நல்ல ஊட்டத்துடன் வளர்ந்து அதிக மசூலை பெருக்க வைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Bodi ,areas ,
× RELATED நெற்பயிரில் குலநோய் தாக்குதல் தீவிரம்