×

கெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து 480 கனஅடியாக நீடிப்பு

ஓசூர், நவ.14: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து 480 கன அடியாக நீடிக்கிறது. கர்நாடக மாநில தென்பெண்ணையாற்று பகுதியான நந்திமலை, தொட்டப்பள்ளபுரம், கே.ஆர்.புரம், பெங்களூரு, சர்ஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம், விநாடிக்கு 480 கனஅடியாக அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி அந்த தண்ணீர் முழுவதும் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று 2வது நாளாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 480 கனஅடியாக நீடித்தது. அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக உள்ளது. தற்போது தென்பெண்ணையாற்று பகுதிகளான பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், பாத்தகோட்டா உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் இருகரைகளை தொட்டபடி பெருக்கெடுத்து செல்வதால், பொதுமக்கள் ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Kelavarapalli Dam ,
× RELATED கர்நாடக ஆலைகள் ரசாயன கழிவுகளை...