×

பிரபல கொள்ளையன் கைது 53 பவுன் நகைகள் பறிமுதல்

காரிமங்கலம், நவ.14: காரிமங்கலம் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், பிரபல கொள்ளையன் சிக்கினான். அவனிடம் இருந்து 53 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ விஜயசங்கர் மற்றும் ேபாலீசார், நேற்று முன்தினம், காரிமங்கலம் பைபாஸ் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ேவகமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சக்திவேல்(30) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு வண்டி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை தொடர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்த 53 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், பாலக்கோடு நீதிமன்றத்தில் நேற்று சக்திவேலை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : robber ,jewelery ,
× RELATED தென்காசியில் தம்பதியரை கட்டிப்போட்டு 106 பவுன் நகை கொள்ளை