கடையநல்லூர், வி.கே.புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்

கடையநல்லூர், நவ. 14: நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடையநல்லூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் கணேசராஜா தலைமை வகித்தார். மாநில விவசாய அணி ஆனைக்குட்டிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டியன், செல்லப்பன், சங்கரபாண்டியன், செங்கோட்டை நகர செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா வரவேற்றார். நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார் தொகுத்து வழங்கினார்.  கூட்டத்தில் கணேசராஜா பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆசியோடு அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு சாட்சியாகத்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது, என்றார்.

இதில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, துணை செயலாளர் தேவகிகுழந்தைவேல், மகளிரணி சுவர்ணா, மாவட்ட மாணவரணி செயலாளர் மகாராஜேந்திரன், துணை செயலாளர் கருப்பையாதாஸ், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் மைதீன், விவசாய அணி பரமகுருநாதன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் புகழேந்தி, ரவிஆறுமுகம், சரவணன், சுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் சுசீகரன், அலியார், முத்தழகு, முத்துக்குட்டி, நல்லமுத்து, நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரபிரசாத், துணை செயலாளர் வெங்கடநடராஜ், மூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், முருகேசன், இடைகால் செல்லப்பா, மெடிக்கல் சரவணன், நகர நிர்வாகிகள் அப்துல்ஜப்பார், ஐவர்குவராஜா, அழகர்சாமி, முத்தையாபாண்டி, ராசையா, பழனிசாமி, செங்கோட்டை குருசாமி, ஞானராஜ், பூசைராஜ், அலெக்ஸ், ஜெயமாலன், சிங்காரவேலன், மாரியப்பன். இலஞ்சி மாரியப்பன், கந்தசாமி, பெரியபிள்ளைவலசை வேம்பு என்ற ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சரவணக்குமார், சுப்பையாபாண்டியன், அந்தோணி, கோமதிசங்கர் உட்பட பலர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.இதேபோல் வி.கே.புரம் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், சிங்கைஅருண் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் மாவட்ட அலுவலகத்தில் நகராட்சி தலைவர், 21 நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு ஏராளமானோர் விருப்ப மனு அளிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் பாலகிருஷ்ணன், இசக்கிமுத்து, முனியசாமி, கிட்டு மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>