×

ஒத்தி வைக்கப்பட்ட போலீஸ் உடல் தகுதித்தேர்வு : நவ.18ல் துவக்கம்

சாயல்குடி, நவ.14:  அயோத்தி பிரச்னை தொடர்பான தீர்ப்பையொட்டி சட்டம் ஒழுங்கு காரணமாக ராமநாதபுரத்தில் ஒத்தி வைக்கப்பட்ட போலீஸ் பணிக்கான உடல் திறன் தேர்வு நவ.18 முதல் 21 வரை நடக்க உள்ளது. நடப்பு ஆண்டிற்காக தமிழ்நாடு காவல்துறையில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண்), சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1119 ஆண்கள், 309 பெண்கள், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 911 ஆண்கள், 247 பெண்கள் என மொத்தம் 2586 விண்ணப்பதாரர்களுக்கு ராமநாதபுரத்தில் தனித்திறன் மற்றும் உடல்திறன் தேர்வு கடந்த நவ.6ம் தேதி முதல் நடந்து வந்தது. இந்நிலையில் நவ.9ம் தேதி சட்ட ஒழுங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உடல்திறன் தேர்வானது வரும் நவ.18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி நவ.9ம் தேதி நடைபெற இருந்த உடல்திறன் தேர்வு நவ.18ம் தேதியும், நவ.11ம்தேதி நடைபெற இருந்த தேர்வு 19ம் தேதியும், நவ.12ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 20ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு நவ.21ம் தேதியும் நடைபெற உள்ளது. விண்ணப்பத்தாரர்கள் இதற்கு முன் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்துடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திலும், சிவகங்கை மாவட்ட விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்திலும் நேரில் நவ.15ம் தேதிக்குள் நேரில் சென்று அழைப்பு கடிதத்தில் புதிய தேதியிட்ட முத்திரையை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் புதிதாக குறிப்பிட்டுள்ள தேதிகளில், புதிய தேதியிட்ட அழைப்பு கடிதத்துடன் சரியாக காலை 5 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய தேதிகளில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை