×

9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

திருப்பூர், நவ 14: திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நாளை (15ம் தேதி) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகிறது. அதன்படி திருப்பூர் வடக்கு பெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, திருப்பூர் தெற்கு முத்தணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், அவிநாசி கருமாபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், ஊத்துக்குளி காவுத்தம்பாளையம் சமுதாய நலக்கூடம், பல்லடம், வே. கள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், தாராபுரம் சேனாபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், காங்கயம் முள்ளிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, உடுமலைபேட்டை ஆமந்தங்கடவு கிராம நிர்வாக அலுவலகம், மடத்துக்குளம் வேடபட்டி கிராம ஊராட்சி சேவை மையம் ஆகிய 9 இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் வருவாய்த்துறையைச் சேர்ந்த வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், நில வருவாய் ஆய்வாளர், நில அளவைத்துறை
அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், வளர்ச்சித்துறையை சேர்ந்த அலுவலர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று அதன்மீது உடனடி நடவடிக்கை  மேற்கொள்ளப்பட உள்ளது. உடனடியாக முடிவெடுக்கப்பட இயலாத கோரிக்கைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

Tags : locations ,Mummy Project Camp ,
× RELATED மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் 10 இடங்களில் தீவிர சோதனை