×

காங்கயம் பகுதியில் அபாயகர ராட்சத மரங்கள்

காங்கயம், நவ. 14: காங்கயம் பகுதியில் பழமையான ராட்சத மரங்கள் அபாயகரமாக இருப்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காங்கயம் பகுதியில் பல இடங்களில் சாலையோரங்களில் பழமையான ராட்சத மரங்கள் பட்டுப்போய் விழும் நிலையில் உள்ளது. இவ்வாறு 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக காங்கேயம்-தாராபுரம் ரோடு ,மற்றும் திருப்பூர் ரோடு ஆகிய நெடுஞ்சாலையோரங்களில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் விழும் நிலையில் காணப்படுகிறது. அதேபோல  நல்லிபாளையம் பிரிவு அருகே சாலையோரம் நிற்கும் ராட்சத மரம் மழை  காலத்தில் கூட துளிர்க்காமல் கருகி பட்டுபோய் நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்வோர் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயனற்று கிடக்கும் ராட்சத மரங்களை வெட்டி அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகளை அங்கு நட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kangayam ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...