×

மாநகராட்சி பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

திருப்பூர், நவ 14: ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. திருப்பூர், ராயபுரம் பகுதியில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.  இதில், கண் பரிசோதனை, காது பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த முகாமை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி ஒருங்கிணைத்தார். இதில் ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

Tags : Free Medical Camp ,Municipal School ,
× RELATED ராஜபாளையம் நகராட்சி பள்ளி நூற்றாண்டு விழா