×

காங்கயம் அருகே சாலையோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை

காங்கயம், நவ.14: காங்கயம் அருகே சாலையோரம் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலைதுறை வைத்துள்ளனர். காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. இன்னும் சில இடங்களில் குப்பைகளோடு இறைச்சி கழிவுகளை கொட்டிவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் நீடித்தது. அதேபோல் சிலல் கட்டிட கழிவுகளையும் சாலையோரங்களில் கொட்டி செல்வதும் தொடர்கிறது. முக்கிய சாலையோரம், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதை தொடர்ந்து காங்கேயம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் 2 இடங்களில் சாலையோரம் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். அதில், சாலையோரம் குப்பை மற்றும் கட்டுமான  கழிவுகளை கொட்டாதீர்கள். மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : garbage dump ,road ,
× RELATED பொன்னை அருகே வெள்ளத்தில்...