×

மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்

கோவை, நவ. 14:  பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த குறிச்சி குளம் தற்போது கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில்  நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம்,   பெரியகுளம்,  வாளாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் என 8 குளங்கள் உள்ளன. கோவையில் மிகப்பெரிய பரப்பளவுடைய குளமான குறிச்சி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குறிச்சி குளத்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை குறிச்சி குளத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், “குறிச்சிகுளம் இனி மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளன” என்றார்.
இது குறித்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் கூறுகையில், “குறிச்சி குளக்கரையை சேதப்படுத்தக்கூடாது, கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

Tags : municipality ,Taguchi Pond ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை