×

வள்ளியாற்றை தூய்மைப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் மனு

திங்கள்சந்தை, நவ. 14:  இரணியல்  வள்ளியாறு ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் பல இடங்களில்  புதர்கள் மண்டி காணப்படுகிறது. இத்துடன் பலரும் வள்ளியாற்றில் குப்பை  மற்றும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றில் நீர் பாய்ந்தோடி  செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது. மேலும் கழிவுகள் மற்றும் குப்பைகளால்  நீர் மாசடைந்து சுகாதார சீர்கேட்டினை உருவாக்கி வருகிறது. இந்த  நிலையில் வள்ளியாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்ரமிப்பு மற்றும் சுகாதார  சீர்கேட்டினை அகற்றிட தூய்மை வள்ளியாறு கூட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.  இந்த அமைப்பின் தலைவர் வேலப்பன், செயலாளர் ஹரி, பொருளாளர் நூருல் அமின்  மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ஆகியோர் பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில்  மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவை நேரில் சந்தித்து மனு  அளித்துள்ளனர். அதில், வள்ளியாற்றை தூய்மைப்படுத்த வேண்டும். அணை  நீர் அனைத்து பகுதிகளிலும் சீராக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.  நீர்நிலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MLA ,Prince ,Collector ,plant ,
× RELATED வடசேரியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு