×

கோவை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

கோவை, நவ.14: கோவையில் இருந்த சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் நாளை (15ம் தேதி) இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் 3 ஏசி பெட்டி, 12 ஸ்லீப்பர் பெட்டி, 2 லக்கேஜ் பெட்டி இடம் பெறும். கோைவ, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர், சூலூர் பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், டூவாடா, சிம்காசலம், கோட்டவால்சா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பாலாசா, சோம்பேட்டா, பெர்காம்பூர், குர்டா, புவனேஸ்வர், நாகஜ் மரதபூர், பத்ராக், பாலாசூர் வழியாக கொராக்பூர், சந்திரகாசி சென்றடையும். வடமாநிலத்திற்கு செல்லும் பயணிகள் ரயிலில் கூட்டம் குவிவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் 17ம் தேதி காலை 8.45 மணிக்கு சந்திரகாசி சென்றடையும். வரும் 22 மற்றும் 29ம் தேதியும் இந்த சிறப்பு ரயில் கோவையில் இருந்து இயக்கப்படும் என சேலம் டிவிசன் ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Coimbatore ,
× RELATED பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு