×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்

கோவை,  நவ. 14: உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மதிமுக  சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. தமிழகத்தில்  விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி கோவை மாநகர் மாவட்ட  மதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி கோவை காந்திபுரத்தில் உள்ள  அதன் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. மாநகர் மாவட்ட செயலாளர்  மோகன்குமார் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். மேயர் பதவிக்கு போட்டியிட  விருப்பம் தெரிவித்து, உமா செல்வராஜ், பிரதீபா நந்தகோபால் ஆகியோர் விருப்ப மனு அளித்து, தலா ரூ.10 ஆயிரம் கட்டண தொகை செலுத்தினர்.

இதேபோல்,  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து கிருஷ்ணசாமி (வார்டு  எண் 20), சித்ரா வெள்ளிங்கிரி (வார்டு எண் 26), விஸ்வராஜ் (10), தங்கமணி  சம்பத் (2), லூயிஸ் (69), கோட்டை ஹக்கீம் (95), திலக்பாபு (53), சுஜிதா  தர்மராஜ் (54), அருண்சாரதி (55), சுசீலா வேலுசாமி (59), விஜயலட்சுமி  பன்னீர்செல்வம் (67), அன்னபூரணி பாலு (66), கவிதா அருணாகிரி (30),  பாலசுப்பிரமணியம் (81), மூர்த்தி (52) ஆகியோர் விருப்ப மனு அளித்து, தலா ரூ.3 ஆயிரம் கட்டண தொகை செலுத்தினர். வரும் 15ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. நிகழ்ச்சியில்,  மதிமுக நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜூனராஜ், சேதுபதி, கணபதி செல்வராஜ்,  முருகேசன், பழனிசாமி, ராமநாதன், கே.எம்.முருகேசன், பேங்க் குமாரசாமி,  செல்வம், மாலிக், பயனியர் தியாகு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Mathrubhumi ,government ,
× RELATED குடிநீர் இணைப்புக்கு மனு