×

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

நாகர்கோவில், நவ.14: நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று நடந்தது.குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற வேண்டியிருந்தது. இரவில் காலதாமதம் ஆகும் என்பதால் இது நேற்று நடத்தும் வகையில் தள்ளி வைக்கப்பட்டது. நேற்று காலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் காலியிடம் இல்லாததால் பலரும் பதவி உயர்வை துறந்தனர். இன்று (14ம் தேதி) முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளும், 15ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டமும் நடைபெறுகிறது. 16ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Tags : High school head teacher promotion consultation ,
× RELATED மழைக்காலத்தில் வீடுகளில் நல்ல...