கோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து பெண் மீது தாக்குதல்

கோவை,  நவ.14:கோவை போத்தனூரில் வீட்டுக்குள்  புகுந்து இளம்பெண் மற்றும் அவருடைய பெற்றோரை தாக்கிய வாலிபர்  கைது செய்யப்பட்டார். மற்ற 2  பேரை போலீசார்  தேடி வருகின்றனர். கோவை போத்தனூர் கண்ணப்பன் சாலையை சேர்ந்தவர்  ராஜா. இவருடைய மனைவி லதா  மேரி(49). இவர்களுடைய  24 வயதுடைய மகள் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை  பார்ப்பதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு  அவருடைய மகள்  துபாயில் இருந்து கோவை வந்தார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று போத்தனூர்  மேட்டூரை சேர்ந்த கோபிநாத்(28) என்ற வாலிபர் செல்போனில் ராஜாவின் மகளிடம் பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் தன்னுடைய நண்பர்கள்  2 பேரை அழைத்து கொண்டு  ராஜா வீட்டுக்கு சென்று ராஜா, அவரது மனைவி, மகள் ஆகிய 3  பேரையும் தாக்கியுள்ளனர்.  இது தொடர்பான  புகாரின் பேரில் போத்தனூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். விசாரணையில் காதல்  பிரச்சினையில் இந்த  தாக்குதல் நடந்ததாக  கூறப்படுகிறது. இதனையடுத்து கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : house ,Coimbatore ,
× RELATED சொந்த செலவில் சூனியம் வீடியோ காலில்...