×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. விருப்ப மனு விநியோகம்

கோவை, நவ. 14: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் விருப்ப மனு படிவம் விநியோகம் செய்யப்பட்டது. கோவை  மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க. சார்பில்   போட்டியிட விரும்புகிறவர்களுக்கு விருப்ப மனு படிவம் வழங்கும் நிகழ்ச்சி  கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது.  மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ.  விருப்ப மனு  படிவங்களை வழங்கினார். இதை, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போட்டி  போட்டு பெற்றுக்கொண்டனர். இவற்ைற பூர்த்தி செய்து விரைவில் தி.மு.க.  அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேயர் பதவிக்கு  ேபாட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வோர், ரூ.50 ஆயிரம் கட்டணம், கவுன்சிலர்  பதவிக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வோர், ரூ.10 ஆயிரம் கட்டணம்  செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாநகர்  மாவட்ட தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து,  உமா மகேஸ்வரி,   பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, பகுதி பொறுப்பாளர்கள்  சேதுராமன்,  கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர்  மகுடபதி, அணி  அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், ரகுமான், ராமமூர்த்தி, தீர்மானகுழு  உறுப்பினர் செல்வராஜ்,  மற்றும் முன்னாள் கவுன்சிலர் மாரிசெல்வம், வக்கீல்  அன்புசெழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,government ,
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா