×

வடசேரி பஸ் நிலையத்தில் இலவச கழிவறை திடீர் மூடல்

நாகர்கோவில், நவ.14: நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்துக்கு, தினமும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அருகே, மாநகராட்சியின் இலவச கழிப்பிடம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த இலவச கழிப்பிடம் திடீரென பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவசரத்துக்கு கழிவறை நோக்கி வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் கட்டண கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வடசேரி பகுதியில் நேற்று பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் மின் மோட்டாரை இயக்கி தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. தண்ணீர் இல்லாத காரணத்தால் இலவச கழிப்பறை பூட்டப்பட்டது என மாநகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : bus stand ,Vadasseri ,
× RELATED சீர்காழி புதிய பேருந்து நிலைய...