மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 74 மனுக்கள் பெறப்பட்டன

கோவை, நவ. 14: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத்திடம் 74 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் 74 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி கமிஷனர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மண்டல உதவி கமிஷனர்கள் செந்தில்குமார்ரத்தினம், மகேஷ்கனகராஜ், அனைத்து மண்டல நகரமைப்பு அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: