×

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி நாகர்கோவிலில் நவ.16ல் மறியல்

நாகர்கோவில், நவ.14:  தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி நாகர்கோவிலில் 16ம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர்கள் முருகானந்தம், சந்திரசேகர், அசோக்ராஜ், ராஜஜெகன், வைகுண்டதாஸ், செல்வராஜ், ஜெரால்டுகென்னடி, காலபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் இடம்பெறும் 10 பேர் கொண்ட கமிட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தனித்தனியே அமைத்திட வேண்டும். இந்த கமிட்டி உள்ளாட்சி தேர்தலில் சிறப்புற பணியாற்றும் வகையில் செயல்வீரர் கூட்டங்கள் கிழக்கு மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும்.

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் விரைவில் சீர்படுத்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர். நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 16ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : highway ,Nagercoil ,
× RELATED ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் புதர் மண்டி கிடக்கும் பயணியர் விடுதி