×

புதிய வாகன பதிவுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதில்லை

சத்தியமங்கலம், நவ.14: சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் சிக்கரசம்பாளையம் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் லைசென்ஸ், புதிய வாகனம் பதிவு செய்து ஸ்மார்ட் கார்டு வழங்குதல், வாகனம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக புதிய வாகனம் பதிவு செய்பவர்களுக்கும், வாகனம் பெயர் மாற்றம் செய்பவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. இதனால், வாகனம் பதிவு செய்யும் நபர்கள் ஸ்மார்ட் கார்டு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு ஆன்லைனில் பிரிண்ட் எடுக்க இயலவில்லை என்பதால் இதுகுறித்து உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததால் சென்னைக்கு சென்று ஸ்மார்ட் கார்டு ஆக்டிவேசன் செய்து வழங்குமாறு தெரிவித்தனர். இதற்கான பணிகள் நடந்து வருவதால் ஓரிரு நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை