×

ஒன்னகரை கிராமத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

ஈரோடு, நவ.14: பர்கூர் ஒன்னகரை மலைக்கிராமத்தில் ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பர்கூர் மேற்கு மலைக்குட்பட்ட ஒன்னகரை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மாதேஸ்(33) என்ற வாலிபர் காய்ச்சலால் இறந்ததையடுத்து கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள், பர்கூர் மற்றும் அந்தியூர் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக கிராம மக்களுக்கு கடும் காய்ச்சல், கை, கால் மூட்டு வலி, சளி, இருமல் ஆகிய பாதிப்பு உள்ளது. மாத்திரை சாப்பிட்டும் சரியாகாமல் உள்ளது. ஒரு சில குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் பாதிப்பு உள்ளதால் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லக்கூட ஆட்கள் இல்லாமல் அவதிப்படுகிறோம். மருத்துவ குழுவினர் யாரும் கிராமத்திற்கு வரவில்லை. எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Virus fever outbreak ,Onnakarai ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...