குழந்தைகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

தூத்துக்குடி, நவ.14:தூத்துக்குடியில் குழந்தைகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை ரயில்வே ஊழியர் மற்றும் போலீசார் வழங்கினர்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரயில்வே துறையும், குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனமான சைல்டுலைன் அமைப்பும் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ரயில்நிலையம் முன்பு ரயில் பயணத்தின்போதும் மற்ற நேரங்களிலும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, ஆதரவற்ற சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து ரயில்வே துறையின் இலவச தொலைபேசி எண் 182 அல்லது குழந்தைகள் உதவி மையம் 1098 எண்ணிற்கு தகவல் தெரிவிப்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில்நிலைய மேலாளர் மகாகணபதி, ரயில்நிலைய அதிகாரி பிரமோத் குமார் சின்கா, ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ.சுப்பிரமணியன், ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. பெருமாள், ரயில்வே சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் வீரம்மாள், மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>