தேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு

தூத்துக்குடி, நவ.14: சென்னையில் தமிழ்நாடு கைப்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர் அபிஷேக், தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இதனையடுத்து தமிழக கைப்பந்து அணிக்கான பயிற்சி முகாமில் அபிஷேக் பங்கேற்க சென்றார். மாணவர் அபிஷேக் மற்றும் பயிற்சியாளர்கள் சீனிவாசன், பவுன், பள்ளி உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுரம், அதனாசியஸ், யோகேஷ் ஆகியோரை பள்ளி தாளாளர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Related Stories:

>