சிவந்தாகுளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

தூத்துக்குடி, நவ. 14:  தூத்துக்குடி  சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கம்  சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற பழைய  மாணவர்கள் சங்கத்தினர் சங்கம் சார்பில் இறகுபந்துகள், இறகுபந்து பேட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.     விழாவுக்கு தலைமையாசிரியை எமல்டா  தலைமை வகித்தார். பழைய  மாணவர்கள் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், கோமதிநாயகம், விஜயகுமார்,  ராஜாசிதம்பரம், ஆர்ட்டிஸ்ட் குமார், கண்ணன், குமார் மற்றும் மாணவர்கள்  என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>