திருச்செந்தூரில் 16ம்தேதி திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அழைப்பு

தூத்துக்குடி, நவ.14: திருச்செந்தூரில் 16ம்தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்களிடம் விளக்குவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 16ம்தேதி மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் எம்எல்ஏ அலுவலகம் எதிர்புறத்தில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.

இதில் இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர் கலைராஜன், தலைமை பேச்சாளர் மதுரை அலெக்ஸ்சாண்டர் சிறப்புரையாற்றுகின்றனர். திமுக மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மருத்துவரணி துணைச்செயலாளர் டாக்டர் வெற்றிவேல், சண்முகையா எம்எல்ஏ, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் பேசுகின்றனர். திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்கிறார். திருச்செந்தூர் பேரூர் செயலாளர் சுடலை நன்றி கூறுகிறார். பொதுக்கூட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>