கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம், கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் இன்று (14ம்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் வந்து, குறைகளை கூறி மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா கேட்டு கொண்டுள்ளார். 

Related Stories:

>