×

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி வாக்குப்பதிவு அலுவலர் நியமன பணி தீவிரம்

திருவள்ளூர், நவ. 14: உள்ளாட்சி தேர்தலுக்கு, வாக்குப்பதிவு அலுவலரை நியமிப்பதற்கான பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில், நகர்ப்புறம், ஊரக பகுதி என உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிசம்பரில் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதற்காக, மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 3,259 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற பகுதிகளில் 6,84,000 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் 682 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஊரக உள்ளாட்சி அமைப்பான, 14 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 ஊராட்சிகளில் 13,54,000 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் 2,577 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6,403 வாக்கு அளிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

நகர்ப்புற வாக்குச்சாவடிக்கு, தலா ஐந்து பேர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். அதாவது, வாக்குப்பதிவு தலைமை அலுவலர் தலைமையில், நான்கு வாக்குப்பதிவு அலுவலர் பணி அமர்த்தப்படுவர்.ஊரக பகுதியில், ஒரு வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எனில் ஏழு பேர், இரு வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எனில், எட்டு பேர் வீதம் பணி அமர்த்தப்படுவர். அதில், தலா ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர் அடக்கம்.அதற்காக, அரசு, அரசு சார்ந்த நிறுவனம், தனியார் பள்ளி, கல்லூரி பணியாளர், ஊழியர்களுக்கு, விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அவை இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளது.

Tags : election ,
× RELATED சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்...