×

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு: ஆவடி நாசர் அறிக்கை

ஆவடி, நவ. 14: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்குமாறு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் விடுத்துள்ள அறிக்கையில், நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், நகரமன்றத் தலைவர், நகரமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்றத்தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் தோழர்கள் உரிய விண்ணப்பத்தை மாவட்ட கழகத்திலிருந்து பெற்று தாம் போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மை பற்றிய முழு விவரங்களை அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இதனை நேற்று (14ம் தேதி) முதல் 20ம் தேதி வரை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை ஆவடி, திருமலைராஜபுரம், ரயில் நிலையம் அருகில் உள்ள ஆவடி நகர திமுக புதிய கட்டிடத்தில் தலைமைக்கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும்,  தலைமை கழகத்தின் அறிவுரைப்படி அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மேற்கண்ட அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும். மேலும், போட்டியிட விரும்பும் கழக தோழர்கள் விருப்ப விண்ணப்ப படிவத்தை வழங்கிய ரசீதை உடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : candidate ,election ,government ,DMK ,Thiruvallur South District ,
× RELATED சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர்...