×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர், நவ.14: உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் தனியார் பள்ளி செஞ்சுலுவை சங்க மாணவர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.பேரூராட்சி செயல் அலுவலர் லதா, உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தனர். தனியார் பள்ளியின் செஞ்சுலுவை சங்க தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். ஆலோசகர் பாண்டியன் வரவேற்றார்.
அம்பேத்கர் சிலை அருகே துவங்கி பேரணி, கேத்தாரீஸ்வரர் கோயில் தெரு, பஜார் வீதி, சன்னதி தெரு, பெரிய நாராசம் பேட்டை தெரு உள்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

அப்போது, தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள், நிலத்தடி நீர் பாதிப்பு, மரம் வளர்ப்போம், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேகரிப்போம், பொது இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றி தூய்மையாக வைத்திருப்போம் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...