×

நிர்வாகப் பிரச்னைகளால் காவலர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு: எஸ்பி தகவல்

காஞ்சிபுரம். நவ.14: நிர்வாகப் பிரச்னைகளால் காவலர் தகுதித்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி முதல் நடைபெறும் என எஸ்பி கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக காவல்துறையில் 2019ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு துறைக்கான உடற்திறன் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த வேளையில், நிர்வாக பிரச்னையின் காரணமாக தற்காலிகமாக உடற்தகுதி தேர்வு  நிறுத்தி வைக்கப்பட்டது.முதற்கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வுகள் வரும்18ம் தேதி முதல் காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் மீண்டும் நடைபெறும்.

கடந்த 9ம் தேதி தேர்வுக்கு அழைக்கப்பட்ட ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வரும்18ம் தேதி காலை 6 மணிக்கும், 11ம் தேதி அழைக்கப்பட்ட பெண்களுக்கு 19ம் தேதி காலை 6 மணிக்கும், 11ம் தேதி தேர்வுக்கு அழைக்கப்பட்ட ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 19ம் தேதி காலை 8 மணிக்கும் இந்த தேர்வுகள் நடைபெறும்.அழைப்பு கடிதம் உள்ள விண்ணப்பதாரர்கள், மாற்றம் செய்யப்பட்ட தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நாளை நடைபெறவிருந்த NET தேர்வு ஒத்திவைப்பு