நேரு பிறந்தநாளை முன்னிட்டு அரசு காப்பகத்தில் குழந்தைகள் தினவிழா

தண்டையார்பேட்டை: ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று ராயபுரத்தில்  உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்தில்  மாவட்ட  சட்ட பணி ஆணைய குழு செயலர் நீதிபதி ஜெயந்தி தலைமையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட குழந்தைகள் கண்காணிப்பாளர் உமா மற்றும் காசிமேடு காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி மற்றும்  முன்னாள் பிரதமர் நேருவின் வாழ்க்கையை பற்றி கவிதைகளை குழந்தைகள் வாசித்தனர். மேலும், மரக்கன்றுகள் நடப்பட்டது.

பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த நீதிபதி ஜெயந்தி கூறுகையில், “இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கு அரசு வழங்குகின்ற உதவி தொகையை அவர்கள் பெற்று கொள்வதற்கு ஏதுவாக  தனியார் வங்கியில் கணக்குகள் தொடங்கி கணக்கு புத்தகம் கொடுக்கப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது” என்றார்.    

Related Stories: